Sunday, August 14, 2011

கல்வி

உண்மையான முஸ்லிம் என்பவன் அல்லாஹ்வின் திருவசனங்களை ஏற்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னவைகளை கற்று தன் வாழ்க்கையில் பின்பற்றுகின்றானோ அவனே உண்மையான முஸ்லிம்.அல்லாஹ்வைப்பற்றியும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைப் பற்றியும் அறியாதவன் நிச்சயம் உண்மை முஸ்லிமாக முடியாது.ஆக ஒருவர் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற வேண்டுமெனில் அவருக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை. கல்வியறிவு இல்லாதவர் நிச்சயமாக உண்மை முஸ்லிமாக முடியாது.
இதை மெய்ப்பிகுகும் விதமாக அல்லாஹ் தனது திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான்.
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? -அல் குர் ஆன் (39:9).
மேலும் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் கல்வியறிவு உடையவர்கள் நேர்வழியில் இருப்பார்கள் என்பதையும் கூறுகிறான்.
هُوَ الَّذِي أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ ۖ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ ۗ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள் -அல் குர் ஆன் (3:7).
وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّكَ فَيُؤْمِنُوا بِهِ فَتُخْبِتَ لَهُ قُلُوبُهُمْ ۗ وَإِنَّ اللَّهَ لَهَادِ الَّذِينَ آمَنُوا إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்-அல் குர் ஆன் (22:54).
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை படைத்துவிட்டு மற்ற அனைத்து ஜீவராசிகலையும் ஆதம் (அலை) அவர்களுக்கு சஜ்தா செய்யச் சொன்னான். ஷைத்தான் மட்டும் இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமல் இறை சாபத்திற்கு ஆலானான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இது ஆதம் (அலை) அவர்கள் மற்ற ஜீவராசிகளைவிட உயர்ந்தவர்கள் என்பதற்காக அல்ல. ஆதம் (அலை) அவர்கள் மற்ற ஜீவராசிகளைவிட கல்வியிலே சிறந்தவர்கள் என்பதற்காக மட்டுமே என்பதை பின்வறும் இறைவசனத்திலே நாம் பார்க்கலாம்.
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَقَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ ۖ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான்.அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்."ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான்.பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.-அல் குர் ஆன் (2:31-34).
கல்வியின் முக்கியத்துவத்தை அவசியத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
'கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்'.
'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது'.
'எவர் ஒருவர் கல்வியைத் தேடி பயணம் செய்கிறாரோ, அல்லாஹ் அவரின் சுவர்க்கத்திற்கான பாதையை எளிதாக்குவான்'.
மேலும் இறைவன் கல்வி ஞானத்தை நமக்கு வழங்குமாறு பின்வரும் வசனம் மூலம் துஆ கேட்கவும் சொல்கிறான்.
وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا
இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!-அல் குர் ஆன் (2:31-34).
ஆகவே நாம் அனைவரும் கல்வி ஞானத்தை தேடும் பணியை இன்று முதல் ஆரம்பம் செய்ய அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!.
எந்த ஒரு முஸ்லிமும் தான் முஸ்லிம் தாய் தந்தைக்குப் பிறந்த காரணத்தினாலே முஸ்லிம் ஆகிவிட முடியாது

No comments:

Post a Comment

cheak