Friday, February 1, 2013

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி

Image
மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி அனைவருக்குமே நெல்லிக்கனியை பற்றி நன்குதெரியும். நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்தநெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால்,இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது.
மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.
5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.
7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.
8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

cheak